சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் செங்கல் சூளையை மழையிலிருந்து பாதுகாக்க முயன்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்தனர். இறப்புக்கான சரியான காரணம் உடற்கூறாய்வுக்குப் பிறகுதான் கண்டறியப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை நடத்திய விசாரணையில், செங்கல் சூளை ஆபரேட்டர் திலீப் சக்ரதாரி, தொழிலாளி ரகுநாத் ஆகியோர் கனமழையின்போது பதனிடப்படாத செங்கல்களை நீர்புகாக் கித்தான் துணியால் மூடியுள்ளனர். மழையில் நனைவதை தவிர்க்க தங்களையும் அத்துணியால் மூடியுள்ளனர்.
பின்னர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் இறந்துள்ளனர். இறப்புக்கான சரியான காரணம் உடற்கூறாய்வுக்குப் பிறகுதான் கண்டறியப்படும் என அர்ஜுனியின் காவல் நிலைய அலுவலர் உமேந்திர டோண்டன் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய ராணுவ அகாதமியில் பயிற்சி: ராணுவத்தில் இணையும் 333 வீரர்கள்