டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து நாடு முழுவதும் அதில் பங்கேற்ற நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 6 நபர்கள் புதுச்சேரிக்கு திரும்பியுள்ளனர் அவர்களில், அரியாங்குப்பம் சொர்னா நகர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா பெருந்தொற்று அறிகுறி இருப்பதை அம்மாநில சுகாதாரத்துறை உறுதிசெய்துள்ளது. இவர்கள் தற்போது புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, இன்று அரியாங்குப்பம் பகுதி முழுவதும் மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரியாங்குப்பம் சொர்னாநகர், புதுவை-கடலூர் பிரதான சாலை ஆகியவை சீல் வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே வரவும் தடை விதித்துள்ளனர். அப்பகுதிகளில் அரசு அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் மாநில அரசின் சிறப்பு மருத்துவ குழுவினர், வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீடுகளில் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா : சுமார் 7 லட்சம் பேரிடம் ஆய்வு