1984-ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, சீக்கியர் சமூகத்தைச் சேர்ந்த அவரது பாதுகாவலர் ஒருவர் படுகொலை செய்தார்.
இதைத்தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் கலவரங்கள் வெடித்தன. இதில், ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் குறித்து நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகின்றன. கலவரத்திற்கு கராணமான பல்வேறு பெரும் புள்ளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்தேறிய இக்கலவரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அம்மாநில முதலமைச்சர் அமைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச காவல் துறை முன்னால் தலைமை இயக்குநர் அதுல் தலைமை வகிக்கும் இந்தக் குழுவில், ஓய்வுபெற்ற காவல் துறை கூடுதல் இயக்குநர் யூகேஷ்வர் கிருஷ்ண ஸ்ரீவஸ்தவா, ஓய்வுபெற்ற நீதிபதி சுபாஷ் சந்திர அகர்வால் ஆகியோர் அடங்குவர். இக்குழுவில், மேலும் ஒரு மூத்த காவல் துறை அதிகாரியும் உள்ளார்.
மேலும், விசாரணை அறிக்கையை ஆறு மாதத்திற்குள் இக்குழு தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.