மகாராஷ்டிரா மாநிலம் கார்வே நகரில் உள்ள ஆண்கள் விடுதி ஒன்றில் சாகர் அசோக் பவார்(18) என்பவர் லக்ஷ்மன் பட்டில்(30) என்பவருடன் ரூம்மேட்டாக தங்கி உள்ளார்.
அதில் லக்ஷ்மன் பட்டில் அசோக் பவாரை புகைப்பிடிக்க வேண்டும் என பல நாள்களாக வற்புறுத்தி வந்துள்ளார்.
அதனால் மன உளைச்சல் அடைந்த அசோக் பவார் தூக்குமாட்டிக் கொண்டு உயிரிழந்தார். இதுகுறித்து காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் லக்ஷ்மன் பட்டிலை கைது செய்தனர்.
இது குறித்து காவலர்கள், "தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த லக்ஷ்மன் பட்டில், அசோக் பவாரை அக்.10-13ஆம் தேதிகளில் புகைப்பிடிக்குமாறு வற்புறுத்தி மிரட்டி உள்ளார். அதில் பயந்துபோன இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விவசாயி தூக்கிட்டு தற்கொலை: காவலர்கள் விசாரணை