வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் இன்று (மே 20) பிற்பகல் முதல் மாலை நேரங்களில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் மூன்று லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து, ஒடிசாவில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வெளியேற்றப்பட்டு ஆயிரத்து 704 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 19 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்.டி.ஆர்.எஃப்.) தயார் நிலையில் உள்ளனர். அதில் தெற்கு பர்கானாவில் 6 அணிகள், கிழக்கு மிட்னாபூர், கொல்கத்தாவில் தலா நான்கு அணிகள், வடக்கு பர்கானாவில் மூன்று அணிகள், ஹூக்ளி, ஹவுராவில் தலா ஒரு அணி மீட்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் கரையைக் கடக்கும் ஆம்பன் புயல் முதலில் மேற்கு வங்கத்தின் திகா, வங்க தேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையில் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சூப்பர் புயலாக மாறும் ஆம்பன்! - தயார் நிலையில் தேசியப் பேரிடர் மீட்புப் படை