ETV Bharat / bharat

கரோனா பாதிப்பு: நாளை முதல் 168 ரயில்கள் ரத்து

author img

By

Published : Mar 19, 2020, 11:57 AM IST

கரோனா குறித்து மக்களிடையே அச்சம் அதிகமாகியதன் காரணமாக பயணிகளின் வருகை குறைந்ததால் நாளை முதல் இந்தியா முழுவதும் 168 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

168-trains-cancelled-and-no-cancellation-charges-due-to-corona-says-indian-railways

கரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 168 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்களிடையே கரோனா குறித்த அச்சம் அதிகமாகியுள்ளது.

இதனால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதையும், பயணம் செய்வதையும் தவிர்த்து வருகின்றனர். இதனால் ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளைப் பொதுமக்கள் ரத்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பயணிகளின் வருகைக் குறைந்ததால் நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரையில் இந்தியா முழுவதும் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கரோனா பாதிப்புகள் காரணமாக ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு அபராதமின்றி 100 சதவிகித தொகையும் திருப்பியளிக்கப்படும் என ரயில்வே துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் சார்பாக பொதுமக்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கக்கோரியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காக்கிக்குள் கலைஞன்! கரோனாவுக்கு எதிராக மிமிக்ரி செய்து அசத்தும் காவலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.