ETV Bharat / bharat

கோவாவில் சிக்கியுள்ள 1,600 வெளிநாட்டவர்கள் ஏப்ரல் 3 தாயகம் திரும்புவார்கள்

பனாஜி: கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடுமுழுவதும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் கோவாவில் உள்ள வெளிநாட்டு பயணிகள் தங்கள் தாயகம் திரும்ப தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Goa
Goa
author img

By

Published : Mar 31, 2020, 11:02 AM IST

கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 15ஆம் தேதிவரை இந்தியா முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய போக்குவரத்தை தவிர அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலமான கோவாவில் சுமார் ஆயிரத்து 600 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.

ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இந்தப் பயணிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்துவருகின்றனர். இவர்கள் நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறைக்கு விவரம் அனுப்பப்பட்டு தற்போது தாயகம் திரும்ப ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இதுகுறித்து கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், 'ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு பயணிகள் ஒன்பது குழுக்களாக பிரிக்கப்பட்டு பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைரும் ஏப்ரல் 3ஆம் தேதி சொந்த நாடு திரும்ப சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறையிடம் கோவா அரசு சார்பில் தொடர்ச்சியாக பேசிவருகிறோம்' எனத் தெரிவித்தார். கோவாவில் இதுவரை கரோனா வைரசால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் தொடரும் கரோனா பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.