காரைக்கால் மஸ்தான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த 6, 8 வயதுடைய சிறுமிகள் இருவரிடம், கேம் விளையாட செல்போன் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த சிறுமிகளின் பெற்றோர்கள், குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.