கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் மாதம் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் தினக்கூலிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இதை உணர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக அரசி, கோதுமை வழங்கப்படும் என கடந்த 6ஆம் தேதி அறிவித்திருந்தார். இத்திட்டம் குறித்து நேற்று (ஏப்ரல் 16) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கெஜ்ரிவால், "இலவச அரிசி, கோதுமை வழங்கல் திட்டத்தின் கீழ் இ-கூப்பன் பெற இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் அனைவரும் ஒன்றுகூடி, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும். டெல்லி அரசு நாள்தோறும் சுமார் 10 லட்சம் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறது. உணவு பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை. உணவு அளிக்கப்படும் இடங்கள் குறித்து ஏழை எளியோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எங்களின் குழு சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளது. உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவி வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்றார்.
கரோனா வைரஸால் டெல்லியில் ஆயிரத்து 578 பாதிக்கப்பட்டுள்ளனர், 32 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க : சீனாவிடமிருந்து 5 லட்சம் துரித பரிசோதனை கருவிகள் பெறப்பட்டன - சுகாதாரத்துறை