இதுகுறித்து அவர், குஜராத்தில் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிமூன்றாக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுள்ளனர்.
கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க ராஜ்கோட், பரோடா, அகமதாபாத், சூரத் உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்.
அப்பணி மூன்று நாள்களில் முடிவடையும். கரோனா பரவாமல் தடுக்க அரசின் ஆலோனைகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அதனைக் கண்டு அஞ்ச வேண்டாம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிர்ச்சி: வெளிநாடு செல்லாத இந்தியப் பெண்ணுக்கு கரோனா தொற்று