ETV Bharat / bharat

டெல்லி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.... நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஸ்வாதி மாலிவால் கோரிக்கை

டெல்லி: 12 வயது சிறுமி கொடூரமாக துன்புறுத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், காவல் துறை குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

12-year-old-girls-rape-accused-to-be-hanged-within-6-months-dcw-to-delhi-police

author img

By

Published : Aug 13, 2020, 3:27 AM IST

தலைநகர் டெல்லி பாசிம் விகாரைச் சேர்ந்த 12 வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி சிலரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், “டெல்லி காவல் துறை இந்த வழக்குத் தொடர்பான விசாரணையில் தங்களுடன் ஒத்துழைக்க மறுக்கின்றது. மருத்துவர்கள் அளித்துள்ள அறிக்கையில் சிறுமி கொடூரமாகத் தாக்கப்பட்டது தெரிகிறது. அவரது பிறப்புறுப்புகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவலர்கள் இந்த வழக்கை கொலை முயற்சி சம்பவமாக சித்தரிக்க முயல்கின்றனர். சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கு ஆறு மாதத்திற்குள் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

பாலியல் வன்புறுத்தலுக்கு முன், குற்றவாளிகள் சிறுமியை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். சிறுமியின் முகம், தலை, வயிற்றில் கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளனர். உடல் முழுவதும் பல காயங்களும், தழும்புகளும் தென்படுகின்றன.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. சிறுமிக்கு தங்களாலான நீதியை பெற்றுத் தருவதே காவலர்களின் பணியாகும். சிறுமி விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.