ETV Bharat / bharat

களத்தில் முக்கிய புள்ளிகள் யார்? யார்?

author img

By

Published : Apr 11, 2019, 3:42 PM IST

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவில் நிதின் கட்காரி, கிரண் ரிஜ்ஜு, வி.கே சிங் உள்ளிட்ட அமைச்சர்களின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படவுள்ளது.

மக்களவை முதல்கட்ட தேர்தல்

  • நிதின் கட்காரி: மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலி களத்தில் உள்ளார்.
  • கிரண் ரிஜிஜூ: மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மேற்கு அருணாச்சலில் முன்னாள் முதலமைச்சரான நபம் துக்கியுடனும், ஜனதா தள வேட்பாளர் ஜர்ஜூன் எட்டியுடன் களம் காண்கிறார்.
  • வி.கே சிங்: முன்னாள் ராணுவ தலைமை தளபதியும், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான வி.கே சிங், உத்தரப்பிரதேச மேற்கு பகுதியான காசியாபாத்தில் போட்டியிடுகிறார்.
  • அசாதுதீன் ஓவைசி: ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி ஐதராபாத் மக்களவை தொகுதியில் களம் காண்கிறார்.
  • ரேனுகா சவுத்ரி: காங்கிரஸ் அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ரேனுகா சவுத்ரி, ஆந்திர கம்மம் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளர் தேவகி வாசுதேவ ராவிற்கு எதிராக போட்டியிடுகிறார்.
  • மகேஷ் சர்மா: மத்திய கலாச்சார மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கௌதம புத்தா நகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பாக சாத்வீரும், காங்கிரஸ் சார்பில் அரவிந்த் சிங்கும் போட்டியிடுகின்றனர்.
  • அஜித் சிங்: முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் உத்தரப்பிரதேச மாநிலமான முசாப்பர் நகரில் போட்டியிடுகிறார்.
  • சத்யபால் சிங்: பாக்பாத் மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரிய லோக் தள தலைவரும், அஜித் சிங்கின் மகனுமான ஜெயந்த் சவுட்தாரியுடன் சத்யபால் சிங் களம் பகிர்கிறார்.
  • கவுரவ் கோகாய்: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அசாம் முதலமைச்சர் தருண் கோகாய் மகனுமான கவுரவ் கோகாய் காளிப்பூர் (Kaliabor) மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • கவிதா: தெலங்கானா முதலமைச்சரின் மகளான கவிதா நிசாமாபாத் மக்களவைத் தொகுதியில் களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து 178 விவசாயிகள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.