மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கக்ரா கிராமம் அருகே இன்று(நவ.13) மாலை 6:45 மணியளவில், பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்திலிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சப் பெற்று வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி காவல்துறையினர் கூறுகையில், விபத்துக்குள்ளான வாகனத்தில், 40 பேர் பயணம் செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில், 4 பெண்கள், 5 ஆண்கள், ஒரு சிறுமி அடங்குவர். இந்த விபத்து, மொரவன் பகுதியிலிருந்து கக்ரா கிராமம் நோக்கி செல்லும் போது நிகழ்ந்தது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓட்டுநர் தூங்கியதால் விபத்து: ஆட்டோ மீது கார் மோதியதில் 7 பேர் படுகாயம்!