ETV Bharat / bharat

"திப்புவின் நிஜ கனவுகள்" புத்தகத்தை விற்பனை செய்ய இடைக்கால தடை! - திப்பு சுல்தான் குறித்த தவறான தகவல்கள்

அட்டாண்டா சி கரியப்பா எழுதிய "திப்புவின் நிஜ கனவுகள்" என்ற புத்தகத்தை விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Bengaluru
Bengaluru
author img

By

Published : Nov 23, 2022, 1:15 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமான "ரங்காயனா" என்ற நாடக நிறுவனம் அம்மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நாடக நிறுவனத்தின் இயக்குனராக இருப்பவர் அட்டாண்டா சி கரியப்பா. இவர், "திப்புவின் நிஜ கனவுகள்" என்ற நாடகத்தை புத்தகமாக எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்திற்கு தடை விதிக்கக்கோரி, பெங்களூருவைச் சேர்ந்த ராய்ஃபுல்லா என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த புத்தகத்தில், திப்பு சுல்தான் குறித்த தவறாக தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், ஆதாரங்கள் இன்றி பல்வேறு தகவல்களை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளதாகவும், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையிலான தகவல்களும் இடம்பெற்றுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புத்தகம் நாட்டில் மத நல்லிணக்கம், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் இதனை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு நேற்று(நவ.22) நீதிபதி ஜே.என். மென்டோன்கா முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த விசாரணை வரும் வரை, "திப்புவின் நிஜ கனவுகள்" புத்தகத்தை விற்பனை மற்றும் விநியோகம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ஆன்லைன் விற்பனை தளங்களிலோ, சமூக ஊடகங்களிலோ விற்பனை செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக புத்தகத்தின் ஆசிரியர், பதிப்பாளர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'போபால் வனவிலங்கு பூங்காவில் புலிகள் மீது கற்கள் வீச்சு' - கேஜிஎஃப் நடிகை ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.