ETV Bharat / bharat

5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி - நிதித்துறை இணையமைச்சர் தகவல்! - நிதித்துறை இணையமைச்சர் பகவத் கே காரத்

கடந்த 5 நிதியாண்டுகளில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் பகவத் கே.காரத் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்தார்.

Banks
Banks
author img

By

Published : Aug 2, 2022, 9:41 PM IST

டெல்லி: மாநிலங்களவையில் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கே.காரத், "கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 96 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 2020-21ஆம் ஆண்டுடன் தள்ளுபடி செய்யப்பட்டதை விட குறைவு.

கடந்த 2017-18ஆம் நிதியாண்டு முதல் 2021-22ஆம் நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் 9 லட்சத்து 91 ஆயிரத்து 640 கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 306 ஆக இருந்தது.

இதில் 2020-21ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 840 பேர் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தனர். இதில் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி மெஹுல் சோக்சி அதிகளவு கடன் தொகையை நிலுவையில் வைத்துள்ளார். அவரது கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் 7 ஆயிரத்து 110 கோடி ரூபாயை வங்கிகளுக்கு நிலுவையில் வைத்துள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க:இந்தியாவில் குரங்கம்மை தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதா..? - மன்சுக் மாண்டவியா பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.