ராஞ்சி: ஜார்கண்ட் மாநில விமான நிலையத்தில் பெங்களூரு செல்வதற்காக பயணி ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவரது பையில் இன்சாஸ் (INSAS) புல்லட் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அங்கிருந்த அதிகாரி, உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் பயணி மற்றும் அவரது உடமையகளை சோதனை செய்தனர். தொடர்ந்து, பயணி மற்றும் அவரது பைகளை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் வசிக்கும் வினோத் யாதவ் என்பது தெரியவந்தது.
தோட்டா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து பயணியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் புறப்பட இருந்த நிலையில், ஸ்கேன் செய்தபோது பையில் வைத்திருந்த இன்சாஸ் புல்லட் சிக்கியதாக வினோத் தெரிவித்தார். தொடர்ந்து அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து விமான நிலைய காவல் நிலைய பொறுப்பாளர் ஆனந்த் குமார் கூறுகையில், “புல்லட்டுடன் பிடிபட்ட நபரின் முழு பின்னணியையும் விமான நிலைய காவல் துறை மற்றும் கிரிதிஹ் காவல் துறையினர் இணைந்து விசாரணை செய்து வருகின்றனர். இன்சாஸ் போன்ற ஆபத்தான ஆயுதத்தின் எவ்வாறு கிடைத்தது குறித்து விசாரணை நடத்திய பின்னர் காவல் துறையினர் குற்றவாளியை சிறையில் அடைத்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை!