ETV Bharat / bharat

கேதார்நாத், பத்ரிநாத்தில் பாறைகள் உருண்டு நிலச்சரிவு; பாதை தடைபட்டதால் பக்தர்கள் அவதி!

உலகப்புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் பாதைகளில் பாறைகள் சரிந்ததால், பயணிகள் தங்களது இறைசுற்றுலாவை தொடரமுடியாமல் தவித்துவருகின்றனர்.

கேதார்நாத் பத்ரிநாத்
Kedarnath Yatra route closed due to rain and landslide
author img

By

Published : May 17, 2022, 11:02 PM IST

உத்ரகாண்ட்: உலகப் புகழ்பெற்ற கேதார்நாத்தில் தற்போது மோசமான வானிலை நிலவுகிறது. கௌரிகுண்ட் அருகே கேதார்நாத் செல்லும் சாலைகளில் பாறைகள் உருண்டு பயணம் தடைபட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர்.இதுமட்டுமல்லாமல், பஞ்சபுலியா அருகே மலையில் இருந்து பாறைகள் சரிந்ததால், பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலையும் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை மூடப்பட்டதால் பத்ரிநாத் யாத்திரையும் தற்காலிகமாக தடைபடவே, அப்பகுதி அரசு ஊழியர்களின் 2 மணி நேர தொடர் முயற்சிக்குப் பின், பாறைகள் அப்புறப்படுத்தப்பட்டு, யாத்திரை தொடர்ந்தது. எனினும், இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.

தினமும் நண்பகலுக்குப் பிறகு கேதார்நாத்தில் மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக கேதார்நாத் யாத்திரை நடைபாதை கௌரிகுண்ட் அருகே இடிந்து விழுந்தது. இதனால் காலை யாத்திரை தொடங்க முடியாமல் கெளரிகுண்டில் பல மணி நேரம் நெரிசல் ஏற்பட்டது.

கேதார்நாத், பத்ரிநாத்தில் பாறைகள் சரிவு

இரண்டு நாட்களுக்கு மலைப்பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது உண்மை என நிரூபணமாகியுள்ளது. இதனால் பயணம் பாதியிலேயே தடைபட்டு, பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதையும் படிங்க: சார்தாம் யாத்திரை; பத்ரிநாத் ஆலயம் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.