டெல்லி: நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டுகிறது. அந்த வகையில் தலைநகரான டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இதனையடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட் மற்றும் செங்கோட்டை வரை நடைபெற்றது. இதில் ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரைப்படை மட்டுமின்றி, ஒட்டக படையும் இடம் பெற்றது. கடற்படையிலிருந்து 144 இளம் மாலுமிகள் பங்கேற்றனர்.
இந்த குடியரசு தின விழாவில், முதல் முறையாக 3 பெண் அலுவலர்களும், 6 அக்னிபாத் வீரர்களும் கலந்து கொண்டனர். விமானப்படையில் 4 அலுவலர்கள் உடன் 148 வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அதேபோல் 148 தேசிய மாணவர் படையினரும், 448 நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும் சென்றனர். மேலும் அணி வகுப்பில் எகிப்து நாட்டு படை பிரிவும் பங்கேற்றது.
-
राज्य- तमिलनाडु
— DD News (@DDNewslive) January 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
विषय- महिला सशक्तिकरण और तमिलनाडु की संस्कृति#RepublicDayWithDoordarshan pic.twitter.com/0748djPoki
">राज्य- तमिलनाडु
— DD News (@DDNewslive) January 26, 2023
विषय- महिला सशक्तिकरण और तमिलनाडु की संस्कृति#RepublicDayWithDoordarshan pic.twitter.com/0748djPokiराज्य- तमिलनाडु
— DD News (@DDNewslive) January 26, 2023
विषय- महिला सशक्तिकरण और तमिलनाडु की संस्कृति#RepublicDayWithDoordarshan pic.twitter.com/0748djPoki
தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளின் அலங்கார அணிவகுப்பு, குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் ஆகியவையும் இடம் பெற்றது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
முக்கியமாகத் தமிழ்நாடு சார்பில் சென்ற அலங்கார ஊர்தியில் ஒளவையார், வேலுநாச்சியார் உள்ளிட்டோரின் சிலைகள் இடம் பெற்றது. சமூக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெண்களின் பங்கு குறித்துச் சென்ற தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி ஊர்வலத்தின்போது, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் போன்றவை பாடலாக பாடப்பட்டது.
இதையும் படிங்க: Republic day: ஆளுநர் முன்பு அணிவகுத்த 'தமிழ்நாடு வாழ்க' அலங்கார ஊர்தி!