ETV Bharat / bharat

நகைக் கடைகளில் மணப்பெண் படத்தை தவிருங்கள்- கை கூப்பும் கவர்னர்! - வரதட்சணை

நகைக் கடைகளில் மணப்பெண் அலங்கார புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Arif Mohammad Khan
Arif Mohammad Khan
author img

By

Published : Aug 12, 2021, 11:01 PM IST

கொச்சி : கேரளாவின் கொச்சியிலுள்ள கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் 7ஆவது பட்டமளிப்பு விழாவில் மாநிலத்தின் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் கலந்துகொண்டார்.

விழாவில் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் தனது கையால் 386 மாணவ- மாணவியருக்கு பட்டம் அளித்தார். இந்த விழாவில் மாணவர்கள் வரதட்சணைக்கு எதிரான பரப்புரையை முன்னெடுத்தனர்.

இதை வெகுவாக பாராட்டிய ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், “மாநிலத்தில் உள்ள நகைக் கடை விளம்பரங்களில் பெண்கள் கழுத்து நிறைய தங்க நகைகளை அணிந்து கொண்டு காட்சியளிக்கும் புகைப்படங்களை தவிருங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக கேரளத்தில் விஸ்மயா என்ற ஆயுர்வேத மருத்துவர் வரதட்சணை என்னும் தீயில் கருகினார். இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வரதட்சணைக்கு எதிரான குற்றங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. தற்போது விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : வரதட்சணை தீயில் கருகிய விஸ்மயா- நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.