ETV Bharat / bharat

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது! - Auto driver held for raping minor in Lucknow

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 10:50 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லன்னோவில் கடந்த திங்கள்கிழமை அன்று பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது 8ஆம் வகுப்பு படிக்கும் மகளை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்தார். தொடர்ந்து காவல் துறையினர் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் செப்.30ஆம் தேதி தனக்கு போதை கலந்த குளிர்பானத்தை கொடுத்தார். அதன் பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தார். தொடர்ந்து, இதனை வெளியில் கூறக்கூடாது என மிரட்டினார். அதன் பேரில் இது குறித்து யாரிடம் கூறவில்லை என தெரிவித்தார்.

சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த தாய், சிறுமியிடம் கேட்கவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றம்சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை நேற்று (அக்.10) கைது செய்தனர்.

தந்தை வெளியூரில் வேலை பார்த்து வருவதால் தாய் மட்டும் தனது மகளை வளர்த்து வருகிறார். இது குறித்து ஆய்வாளர் பிரிஜேஷ் சந்திர திவாரி கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சிறுமிக்கி மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர், விரைவில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்" என்றார்.

இதையும் படிங்க: வாத்து மேய்ந்ததில் தகராறு.. இளைஞரை வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.