ETV Bharat / bharat

Ind Vs Aus 2nd ODI : அதிரடியான பந்துவீச்சில் சுருண்ட ஆஸ்திரேலியா.. தொடரைக் கைப்பற்றிய இந்தியா! - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 1:30 PM IST

Updated : Sep 24, 2023, 10:17 PM IST

இந்தூர் : இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப், மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெறுகிறது. இன்றைய இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், கிளைன் மேக்ஸ்வெல் உள்ளிட்டோருக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து ஆட்டம் தொடங்கியது. இதில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மீண்டும் பிற்பகல் 2.50 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

இதில் நிலைத்து நின்ற ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் இருவரும் சதம் அடித்து இந்திய அணிக்கு வலு சேர்த்தனர். மேலும், ஷ்ரேயாஸ் 3 சிக்ஸர் 11 பவுண்டரிகள் உடன் 105 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதேபோல், 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் உடன் 104 ரன்கள் எடுத்த நிலையில், சுப்மன் கில் வெளியேறினார்.

மேலும், சூர்யகுமார் யாதவ் 6 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் விளாசி 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேநேரம், கேப்டன் கே எல் ராகுல் 52 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இவ்வாறு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்களைக் குவித்தது.

அதேபோல், ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், ஜோஷ் ஹேசில்வுட், சீன் அபோட் மற்றும் ஆடம் ஜம்பா ஆகிய வீரர்கள் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த நிலையில், 400 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது.

இதில், ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் தொடங்கி உள்ளது. மேலும், மழை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் 33 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக 317 ரன்களாக ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 217 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்த இன்னிங்ஸில், அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வலு சேர்த்தனர்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு :

இந்தியா : சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சீன் அபோட், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட், ஸ்பென்சர் ஜான்சன்.

இதையும் படிங்க : Ind Women Vs Ban Women : ஆசிய விளையாட்டு போட்டி கிரிக்கெட் : அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய மகளிர்!

Last Updated : Sep 24, 2023, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.