இதுகுறித்து ரிசர்வ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், " அதிக பரிமாற்றக் கட்டணம் மற்றும் ஏடிஎம் பராமரிப்புச் செலவை ஈடுசெய்யும் வகையில், பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த புதிய உத்தரவு வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள இலவச ஏடிஎம் பணப் பரிவர்த்தனையைகடந்தவுடன் 20 ரூபாய் வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. புதிய உத்தரவு மூலம், இனிமேல் 20 முதல் 21 ரூபாய் வரையில் வசூல் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.15-இருந்து ரூ.17-ஆக உயர்த்தவும், பணமில்லாத பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.5-இருந்து ரூ.6-ஆக உயர்த்தவும் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.