மகாராஷ்டிரா மாநிலம், தானே உல்ஹாஸ் நகரில் நேற்று (மே.28) இரவு ஐந்து மாடி கட்டத்தின் தளம் இடிந்து விழுந்ததுள்ளது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுவரை, கட்டட இடிபாடுகளிலிருந்து, உயிரிழந்த நிலையில் ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 15ஆம் தேதியன்று உல்ஹாஸ்நகர் பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: ஹாக்கி ஸ்டிக்கால் தாக்கும் சுஷில் குமார் - ஷாக்கிங் சிசிடிவி காட்சி!