பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனிதத் தலத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த 816 பேர் கடந்த 12ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர். ஏப்ரல் 12ஆம் தேதி அன்று கல்சா சஜ்னா தினத்தையும், ஏப்ரல் 14ஆம் தேதி அறுவடை நாளான பாய்க்ஷி விழாவையும் அங்கு கொண்டாடிய பின், அவர்கள் இந்தியா திரும்பினர்.
நாடு திரும்பிய அவர்களுக்கு பஞ்சாப்பில் உள்ள அட்டாரி- வாகா எல்லைப் பகுதியில் கோவிட்- 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதியானது.
மேலும், பலருக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.