தலைநகர் டெல்லி கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 395 உயிரிழப்புகள் அங்கு பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் 73,851 பேருக்கு பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அதில் 32.82 விழுக்காடு பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை மாநிலத்தில் 15,772 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 97,977 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பல மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்படு, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவிவரும் சூழலில், இவற்றை சீர் செய்ய மத்திய, மாநில அரசுகள் போர் கால அடிப்படையில் செயல்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க: ஒரே நாளில் 137 பேர் பலி - தகன மையத்தில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்!