மேஷம் : சமூகப் பொறுப்புகள் மற்றும் அலுவலக பணியின் காரணமாக உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும். இதிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு உங்களுக்கான நேரத்தை செலவழிக்க வேண்டும். உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உங்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டால், அனைத்து பணிகளும் பாதிக்கப்படும்.
ரிஷபம் : உங்கள் நிர்வாகத் திறன் மற்றும் ஒருங்கிணைப்பு ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டுவதற்கான சிறப்பான நாள் இது. பணியிடத்திலோ அல்லது தொழிலோ, களத்தில் இறங்கி முழுத் திறமையையும் வெளிப்படுத்துங்கள். நீங்கள் உங்கள் சக ஊழியர்கள், மேலதிகாரிகள், பங்காளர்கள் மற்றும் போட்டியாளர்களிடம் உங்கள் மீதான நல் அபிப்ராயத்தை ஏற்படுத்தி, அவர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெறுவீர்கள். எதையும் அதிகமாகச் செய்யாதீர்கள். உங்களால் இயன்ற விஷயங்களைத் தாண்டி விஷயங்களை செய்யாதீர்கள். அது உங்களுக்கே எதிராகத் திரும்பக்கூடும்.
மிதுனம் : அனைத்து விதமான கூட்டாண்மைகளிலும் ஈடுபடுவதற்கு அருமையான நாள் இது. உங்கள் நெருங்கிய நண்பர்களுடனான பந்தத்திற்கான நாள் இது. இணைந்து கணக்குத் துவங்குதல், ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளுதல். எதிர்கால நலனுக்குத் திட்டமிடல் ஆகியவற்றைச் செய்யலாம். நீங்கள் செய்யும் எதிலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். மேற்கொண்டு படிப்பதற்கு ஆசைப்படும் உங்களில் சிலர், தெளிவான முடிவை எடுக்கக் கூடும்.
கடகம் : உங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள, பணத்தை பயன்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் எதையேனும் மாற்ற விரும்பினால் அதையும் பணத்தை பயன்படுத்தி மாற்றுவீர்கள். உங்கள் பணம் வரவினால் உங்கள் அன்பிற்கு உரியவர்கள் பயனடைவார்கள். அனைத்து தரப்பிலிருந்தும் பணவரவு இருப்பதைப் போல, அனைத்து தரப்பிலிருந்தும் பண விரயமும் இருக்கும்.
சிம்மம் : சில வாக்குறுதிகள் காற்றில் பறந்து விடும். அவை யாவும் நிறைவேறாது. அதேபோன்று இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தை சாதித்தது போல் தோன்றினாலும், அந்தப் பணி நிறைவேறாமல் இருக்கும். வெற்றி கை நழுவிப் போகும். எப்போதும் வெற்றி சாத்தியம் அல்ல என்பதை நினைவில் கொண்டு, ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும். மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.
கன்னி : உங்களது மனதில் பல்வேறு அறிவார்ந்த எண்ணங்கள் உதித்துக் கொண்டே இருக்கும். உங்களது அற்புதமான செயல் ஆற்றல் மூலம், அனைத்தையும் சரி செய்து விடுவீர்கள். மற்றவர்கள் மனதைப் படித்து, உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
துலாம் : நீங்கள், நெறிமுறைகளுக்கு உட்பட்டு கடுமையாக உழைக்கும் தன்மை கொண்டவராக இருப்பீர்கள். இன்று வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கும், அமைப்புசாரா பணியாளர்களுக்கும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் உள்ளுணர்வை மதித்து செயல்பட்டால், தவறு ஏதும் நிகழாது. காலையில் மேற்கொண்ட கடும் உழைப்பிற்கு, மாலையில் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பணியை மகிழ்ச்சியுடன் தொடர்ந்து மேற்கொள்ளவும்.
விருச்சிகம் : இன்று, உங்களது கிரக நிலைகள் மிகவும் சாதகமாக உள்ளன. குழுவாக பணியாற்றுவதும் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து, குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் சமமாக நடத்துவீர்கள். இதனால் பணியிட சூழல் இணக்கமானதாக இருக்கும்.
தனுசு : உங்கள் மனதில் உள்ள முனிவர் இன்றும் வழிநடத்துவார். மன அமைதிக்கான மருந்து உங்களிடமே உள்ளது. நீங்கள் இன்று ஞானத்தையும் திருப்தியான உணர்வையும் கொண்டிருப்பீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்துவீர்கள். பொதுவாக, ஒரு அமைதியான நாளாக இன்று இருக்கும்.
மகரம் : உங்கள் அபரிதமான அறிவுத்திறமை உங்களுக்கு அற்புதமான வெற்றிகளை அளிப்பதோடு மட்டுமலாமல், உங்களுடைய சிறந்த ஆலோசனையால், நெருங்கிய கூட்டாளிகள் தனது தொழிலில் வெற்றி பெறுவார்கள். பல பிரச்சினைகள் ஏற்படலாம், ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அனைத்தையும் எளிதாக சமாளிப்பீர்கள். செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு திட்டம் வெற்றி பெற்று உங்களுக்கு புகழை சேர்க்கும்.
கும்பம் : நீங்கள் உங்களுக்கான ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டீர்கள். இது உங்களது கடின உழைப்பின் காரணமாக கிடைத்த பலனாகும். போட்டியாளர்கள் உங்களை விமர்சிக்கலாம். உடல்நலக் குறைவும் உங்களுக்கு ஏற்படும் சாத்தியம் உண்டு. ஆனால் அனைத்தையும் புன்னகையால் வெற்றி கொண்டு சமாளித்துவிடுவீர்கள்.
மீனம் : புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். வருங்காலத்திற்கு உதவும் வகையில் கணிசமான அளவு முதலீடுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்பமே உங்கள் வெற்றிக்கான ஆதாரமாக இருக்கும். இதை நீங்கள் நன்றாக உணர்ந்து, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். புன்னகையின் மூலம், பல இதயங்களை வெற்றி கொள்வீர்கள்.
இதையும் படிங்க : Weekly Rasipalan: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய ராசி எது தெரியுமா?