ETV Bharat / bharat

தடுப்பூசி போடச்சொன்ன ஆஷா பணியாளர்கள்: காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவலர்கள் - தடுப்பூசி போட சொன்ன ஆஷா பணியாளர்கள்

புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனச் சொன்ன ஆஷா பணியாளர்களைத் தகாத சொற்கள் கூறி தாக்க முயன்றுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்காமல், காவல் துறையினர் ஆஷா பணியாளர்களைக் கிராமப்புற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆஷா பணியாளர்கள் போராட்டம்
ஆஷா பணியாளர்கள் போராட்டம்
author img

By

Published : Dec 10, 2021, 11:42 AM IST

புதுச்சேரி: ஏம்பலம் கரிக்கலாம்பாக்கத்தில் பெண் ஆஷா பணியாளர்கள், புதுச்சேரியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற வகையில் வீடு வீடாகச் சென்று வலியுறுத்திவருகின்றனர்.

இந்த நிலையில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆஷா பணியாளர்கள் கூறிய நிலையில், குறிப்பிட்ட வீட்டிலிருந்த நபர்கள் ஆஷா பணியாளர்களைத் தகாத சொற்கள் கூறி தாக்க முயன்றுள்ளனர். இந்தச் சம்பவம் ஆஷா பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆஷா பணியாளர்கள்
ஆஷா பணியாளர்கள்

சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்காமல்

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்காமல், காவல் துறையினர் ஆஷா பணியாளர்களைக் கிராமப்புற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதற்குப் புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்த ஆஷா பணியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் ஆஷா பணியாளர்கள் போராட்டம்

இதனையடுத்து, இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஏராளமான ஆஷா பணியாளர்கள் புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பற்றச் சூழல்

ஆஷா பணியாளர்கள் போராட்டம்
ஆஷா பணியாளர்கள் போராட்டம்

சுகாதாரத் துறையின் உத்தரவின்பேரில்தான் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், எங்களுக்குப் பாதுகாப்பற்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஷா பணியாளர்கள் போராட்டம்
ஆஷா பணியாளர்கள் போராட்டம்

இதையும் படிங்க: தாய்மொழியில் பேச தயங்கிய பெண் எம்பி, உரையாற்ற ஊக்கமளித்த சபாநாயகர்... குவியும் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.