அமராவாதி (ஆந்திர பிரதேசம்): வங்ககடலில் ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கும்- நர்ஸாபுரத்திற்கும் இடையே அசானி புயல் நேற்று இரவு வலுவிழந்தது. இது குறித்து ஆந்திர மாநிலம் பேரிடர் மேலாண்மை நிர்வாகம் வெளியிட்ட தகவலில், அசானி புயல் வலுவிழந்து உயர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. மேலும் வங்ககடலில் யானம் -காக்கிநடா கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்தது என தெரிவித்துள்ளது.
இருப்பினும், கடலோர ஆந்திர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. வங்கக்கடல் தொடர்ந்து சீற்றமாக இருக்கும் என்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என SDMA (ஆந்திர மாநிலம் பேரிடர் மேலாண்மை நிர்வாகம்) இயக்குநர் அம்பேத்கர் கூறினார்.
முன்னதாக நேற்று மாலை, கிருஷ்ணா மாவட்டத்தில் மச்சிலிப்பட்டினம் கடற்கரையிலிருந்து 20-30 கிமீ தொலைவில் அசானி புயல் மையம் கொண்டிருந்தது. அசனியின் தாக்கத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.
இதையும் படிங்க:தீவிரமடையும் அசானி புயல்- ரத்து செய்யப்பட்ட விமானங்கள்