மும்பை : மும்பை-கோவாவுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தில் கலந்துகொண்ட 20 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் மகனான ஆர்யன் கானும் ஒருவர்.
ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஒருநாள் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், வழக்கில் பிணை கோரி ஆர்யன் கான் போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஆர்யன் கான் பிணை மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து தொடர் முயற்சிக்கு பிறகு ஆர்யன் கானுக்கு, கிட்டத்தட்ட 22 நாள்கள் கழித்து வியாழக்கிழமை (அக்.28) மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.
இதையடுத்து, மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்யன் கான் சனிக்கிழமை (அக்.30) விடுதலை ஆனார். இவரை அழைத்துச் செல்ல ஷாருக் கான் சிறைச்சாலைக்கு வந்திருந்தார்.
ஆர்யன் கான் மீது தடை செய்யப்பட்ட போதைப் பொருள் நுகர்வு, வைத்திருத்தல், விற்பனை அல்லது வாங்குதல், குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆர்யன் கானுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ள முன்முன் தமேச்சா (Munmun Dhamecha) பைகுலா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மேலும் பல்வேறு பிரிவுகளில் போதைப் பொருள் தடுப்பு அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!