புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநில அரசு பொது இடங்களில், பெரிய சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடலாம் என அறிவித்தது.
அதனடிப்படையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஒயிட் டவுன் பகுதியில் உள்ள, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் ,சதுர்த்தி விழாவையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன.
உற்சவ விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. கொழுக்கட்டை படையிலுட்டு விநாயக பெருமானுக்கு சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகப்பெருமானை தரிசித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதமும் வழங்கப்பட்டன. முன்னதாக கரோனா காரணமாக அனைத்து பக்தர்களுக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கரோனா கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டு அனைத்து பக்தர்களும் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா