ஜம்மு காஷ்மீர்: இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கென்ட் (Kent)என்ற நாய் இன்று (செப் 12) வீர மரணம் அடைந்து உள்ளது. லேபரடார் வகையைச் சேர்ந்த இந்த ராணுவ வீரருக்கு 6 வயது ஆகிறது. யூனிட் 21 (Unit 21 Army dog team) ராணுவ குழுவைச் சேர்ந்த கென்ட், பயங்கரவாதிகளைத் தேடச் செல்லும்போது வீர மரணத்தை தழுவி உள்ளது.
-
J&K | Rajouri encounter | Indian Army dog Kent, a six-year-old female labrador of the 21 Army Dog Unit laid down her life while shielding its handler during the operation in J&K. Kent was leading a column of soldiers on the trail of fleeing terrorists. It came down under heavy… https://t.co/I2haH34pbO pic.twitter.com/mSGyhbWt8q
— ANI (@ANI) September 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">J&K | Rajouri encounter | Indian Army dog Kent, a six-year-old female labrador of the 21 Army Dog Unit laid down her life while shielding its handler during the operation in J&K. Kent was leading a column of soldiers on the trail of fleeing terrorists. It came down under heavy… https://t.co/I2haH34pbO pic.twitter.com/mSGyhbWt8q
— ANI (@ANI) September 12, 2023J&K | Rajouri encounter | Indian Army dog Kent, a six-year-old female labrador of the 21 Army Dog Unit laid down her life while shielding its handler during the operation in J&K. Kent was leading a column of soldiers on the trail of fleeing terrorists. It came down under heavy… https://t.co/I2haH34pbO pic.twitter.com/mSGyhbWt8q
— ANI (@ANI) September 12, 2023
இது தொடர்பாக ஜம்முவின் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தேடுதல் வேட்டையின்போது, ராணுவ வீரர்களை வழிநடத்திச் சென்ற 21வது ராணுவ நாய் குழுவைச் சேர்ந்த 6 வயதுமிக்க பெண் லேபரடார் வகையைச் சேர்ந்த கென்ட் என்ற நாய் வீர மரணம் அடைந்தது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளின் பாதையில் கென்ட், தனது வீரர்களின் வரிசையை வழிநடத்தியது. இது கடுமையான விரோதப் போக்கின் கீழ் வந்தது” என தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, இன்று மாலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நார்லா பகுதியில் நிகழ்ந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டார். இந்த தேடுதல் வேட்டையின்போது ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். மேலும், ஒரு போலீஸ் எஸ்பிஓ உள்பட மூன்று பேர் காயம் அடைந்தனர் என ஜம்முவின் ஏடிஜிபி முகேஷ் சிங் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: காஞ்சி பட்டு முதல் காஷ்மீரி பஷ்மினா, ஜிக்ரானா இட்டார் வரை.. ஜி20 தலைவர்களுக்கு இந்தியா வழங்கிய பரிசுகள் விபரம்!