இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து இந்தப் பயணத்தின்போது விரிவாக விவாதிக்கப்படும் என இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ராணுவத் தலைவர்களை சந்திக்கும் இந்திய ராணுவத் தளபதி நரவனே, இரு நாடுகளுக்கு இடையே ராணுவ கூட்டுறவு, பயங்கரவாத தடுப்புத் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கவுள்ளார்.
இன்று(ஜூலை 4) பிரிட்டன் செல்லும் நரவனே அந்நாட்டு ராணுவச் செயலாளர், ராணுவத் தளபதி ஆகியோரை சந்திக்கிறார்.
அதன்பின், ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் அவர் இத்தாலி செல்கிறார். இத்தாலி நாட்டில் உள்ள காசினோவில் இந்திய ராணுவ வீரர்களுக்கான நினைவகத்தை தொடங்கிவைக்கிறார்.
இதையும் படிங்க: பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் கோர விபத்து: 17 பேர் பலி