மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான விசாரணையில் பாலிவுட் பிரபலங்கள் பலர் விருந்துகளில் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதாகத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தீபிகா படுகோன், சாரா அலிகான் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களிடம் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் விசாரணை செய்துவருகின்றனர்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பாலின் வீட்டில், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவருக்கு அழைப்பாணை அனுப்பி, நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அவ்வழக்கின் விசாரணைக்காக, அர்ஜுன் ராம்பாலின் சகோதரி கோமல் ராம்பால் இன்று (ஜன. 11) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னிலையாகினர்.
முன்னதாக விசாரணைக்காக முன்னிலையாகக்கோரி, கோமலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில், தனிப்பட்ட சில காரணங்களுக்காக கோமல் முன்னிலையாக முடியாது என அவரது வழக்குரைஞர் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார்.
இதையும் படிங்க: நாட்டில் 6 மாதங்களுக்குப் பின் சரிந்த கரோனா தொற்று எண்ணிக்கை