ETV Bharat / bharat

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் உண்டா? என்பிசிஐ முழு விளக்கம் - கட்டணம் ஏதும் கிடையாது

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என, தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) விளக்கம் அளித்துள்ளது.

UPI transactions
யுபிஐ பரிவர்த்தனை
author img

By

Published : Mar 29, 2023, 4:12 PM IST

ஹைதராபாத்: நாட்டின் பல்வேறு நகரங்களில் யுபிஐ மூலம் போன் பே, கூகுள் பே ஆகிய செயலிகளை பயன்படுத்தி, பொதுமக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். சில்லறை வணிகக்கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்களில் பணப்பரிவர்த்தனைக்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கிராமங்களில் கூட, ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் ரூபாய் பயன்பாடும் குறைந்து வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.2,000க்கும் மேற்பட்ட யுபிஐ வாலட் பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பணப்பரிவர்த்தனைக்கழகம் அறிவித்துள்ளது. இதனால் போன் பே, கூகுள் பே பயன்படுத்தினாலும் கட்டணம் வசூலிக்கப்படுமோ என வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் வங்கிக்கணக்குகளுடன் இணைக்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "யுபிஐ இலவசம், வேகம் மற்றும் பாதுகாப்பானது. ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட்கள் (பிபிஐ வாலட்கள்) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

பெரும்பாலும் வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ பரிவர்த்தனைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தமுள்ள யுபிஐ பரிவர்த்தனைகளில், 99.9 சதவீதம் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டவை தான். இந்த பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது. வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கட்டணம் இன்றி இலவசமாக பயன்படுத்தலாம். மொபைல் வாலட் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே 1.1 சதவீத கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என பேடிஎம் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: டெல்லி வீதிகளில் கூலிங் கிளாஸுடன் கூலாக உலா வரும் அம்ரித் பால் சிங்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.