கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கரோனா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக ப.சிதம்பரம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ’’ நாட்டில் ஆக்ஸிஜன், தடுப்பூசிகளுக்கு பஞ்சமில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உத்தரப் பிரதேசத்தில் ரெம்டெசிவிர் மருந்துகள், தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லை என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறேன்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவது பொய்யான செய்திகளா? செய்திதாள்களில் வெளிவரும் கட்டுரைகள் தவறானதா? மருத்துவர்கள் அனைவரும் பொய் கூறுகிறார்களா? பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் பொய் பேசுகிறார்களா? அனைத்து புகைப்படங்களும் போலியானவையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.