ETV Bharat / bharat

ஜூன் 20ஆம் தேதி வரை ஆந்திராவில் ஊரடங்கு நீட்டிப்பு!

ஆந்திர மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை, ஜூன் 20ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Andhra govt extends COVID curfew till June 20
author img

By

Published : Jun 7, 2021, 6:23 PM IST

அமராவதி (ஆந்திரப் பிரதேசம்): ஜூன் 20ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால், தற்போது அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, ஜூன் 10ஆம் தேதி வரை நண்பகல் 12 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை நண்பகல் 2 மணி முதல், மறுநாள் காலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வந்தாலும், மூன்றாவது அலையைத் தடுக்கும் பொருட்டு மாநில அரசு ஊரடங்கை நீட்டித்து முன்னேற்பாடு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.