டெல்லி காவல்துறையின் 74ஆவது எழுச்சி நாள், வெகு விமரிசையாக இன்று (பிப்.16) கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
விழாவில் பேசிய அவர், " நாட்டின் அமைதியை அழிப்பதற்கு அந்நிய சக்திகள் முயற்சித்து வருகிறன. குறிப்பாக, தலைநகர் டெல்லியை மையப்புள்ளியாக வைத்து அவைகள் செயல்படுகின்றனர். கடந்த 2020 பிப்ரவரியில் நடந்த கலவரங்கள், சட்டவிரோத போராட்டங்கள் அவர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், கலவரத்தைச் சிறப்பாகக் கையாண்டு டெல்லி காவல்துறை மற்ற காவல் துறையினருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.
அதேபோல, குடியரசு தினத்தன்று விவசாயிகளின் நடத்திய டிராக்டர் பேரணியை, வன்முறையாக மாற்றியதில் அந்நிய சக்திகளின் பங்களிப்பு இருந்ததை நாம் பார்த்தோம். அவர்கள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், காவல் துறையினர் அதனை பொறுமையாகக் கையாண்டனர்" எனப் பாராட்டினார்.
இதையும் படிங்க: 2016 தேசத்துரோக வழக்கு; கனையா குமாருக்கு சம்மன்!