மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சில்வர் ஓக்கில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு இன்று (டிசம்பர் 13) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, மும்பைக்கு வந்து சரத் பவாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், சரத் பவாரின் பாதுகாப்பு அலுவலர்கள், சில்வர் ஓக் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஐபிசி 294,506(2) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொலைபேசி எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினர்.
முதல்கட்ட விசாரணையில், கொலை மிரட்டல் விடுத்த நபர் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் இவர் மனநலம் குன்றியவராக இருப்பதும் தெரியவந்தது. அதோடு பலமுறை பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சரத் பவாருக்கு பல முறை கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்தாண்டு மே, ஏப்ரல் மாதங்களில் மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய ராணுவம் - சீனா இடையே மோதல்; எந்த வீரரின் உயிருக்கும் பாதிப்பில்லை - ராஜ்நாத் சிங்