ETV Bharat / bharat

மரண தண்டனை கொடுங்க... தும்கா சிறுமியின் இறுதி வாக்குமூலம்... - சிறுமி இறுதி வாக்குமூலம்

தும்காவில் காதலிக்க மறுத்ததற்காக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி, இறப்பதற்கு முன்பு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தன்னை தாக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

death
death
author img

By

Published : Aug 29, 2022, 8:41 PM IST

தும்கா: ஜார்க்கண்ட் மாநிலம், தும்காவைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக் என்ற இளைஞர் பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். தன்னைக் காதலிக்கும்படி சிறுமியை ஷாருக் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சிறுமி மறுப்புத்தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 23ஆம் தேதி, காலையில் சிறுமி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக அவர் மீது பெட்ரோலை ஊற்றிய ஷாருக், தீ வைத்து கொளுத்தியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சிறுமி கடந்த 27ஆம் தேதி இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் இறப்பு அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இதைத்தொடர்ந்து இன்று(ஆக.29) சிறுமியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. சிறுமி மரணத்திற்கு நீதி கேட்டு, கடையடைப்பு, மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருவதால், தும்காவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறுமி இறப்பதற்கு முன்பு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தன்னைத் தாக்கிய குற்றவாளிக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சிறுமி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக கடந்த 23ஆம் தேதி, ஷாருக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் தொழிலதிபர் கடத்தல் வழக்கு.. பெண் மருத்துவர் மற்றும் 6 பேர் கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.