ETV Bharat / bharat

Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்றம் காவல்.. ராஜமுந்திரி சிறையில் அடைக்க ஏற்பாடு!

Chandrababu Naidu Produce ACB court : திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Chandrababu Naidu
Chandrababu Naidu
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 8:25 AM IST

Updated : Sep 10, 2023, 7:18 PM IST

விஜயவாடா : ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கு தேச கட்சித் தலைவரும், முன்னாள் ஆந்திரப் பிரதேச முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாடுக் கழகத்தின் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 371 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாகக் கோரி ஆந்திர சிஐடி போலீசாரால் நேற்று (செப்.9) நந்தியாலா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரது கைதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்ற நிலை நிலவியது. தமிழக - ஆந்திரா எல்லையில் பதற்றம் நிலவியதை அடுத்து இரு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட 24 மணி நேரம் கடந்த நிலையில், ஒரு நாள் முழுவதும் ஆந்திர சிஐடி போலீசார், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவிடம் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திறன் மேம்பாட்டு கழக ஊழலில் 300 கோடி ரூபாய் பணம் போலி ரசீதுகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஷெல் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக சிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளனர். இதுவரை நடந்த விசாரணையின்படி, ஆறு திறன் மேம்பாட்டுக் குழுக்களுக்குத் தனியார் நிறுவனங்கள் செலவழித்த மொத்தத் தொகை, ஆந்திர அரசு மற்றும் ஆந்திர திறன் மேம்பாட்டு மையத்தின் மூலம் அளிக்கப்பட்ட நிதியிலிருந்து, மொத்தம் 371 கோடி ரூபாய் என தெரியவந்து உள்ளதாக சிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே, இன்று (செப்.10) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வழக்கில் சிஐடி போலீசார் தங்கள் தரப்பு ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். அதேநேரம் சந்திரபாபு நாயுடுவை ஜாமீனில் கொண்டு வர அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம் அவரை செப்டம்பர் 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் அவரை ராஜமுந்திரி சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Chandrababu Naidu arrest: தமிழக - ஆந்திர எல்லையில் நிலவும் பதற்றம்..! பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!

Last Updated : Sep 10, 2023, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.