ETV Bharat / bharat

Chandrababu Naidu arrest : ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது! ஆந்திர சிஐடி போலீசார் நடவடிக்கை!

AP former CM Chandrababu Naidu arrested in skill development case : திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி போலீசார் அதிகாலையில் கைது செய்தனர்.

Chandrababu Naidu
Chandrababu Naidu
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 7:45 AM IST

Updated : Sep 9, 2023, 7:59 AM IST

ஐதராபாத் : திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு கைது செய்யப்பட்டு உள்ளார். ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தெலுங்கு தேசி கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை இன்று அதிகாலையில் ஆந்திர சிஐடி போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர முதலமைச்சராக ஆட்சியில் இருந்த போது திறன் மேம்பாட்டு கழகத்தில் சந்திர பாபு முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சந்திரபாபு கைது செய்யப்படும் தகவலை அறிந்து நிகழ்விடத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலவரம், வன்முறைகளை தவிர்க்க போலீசார் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து அவரது வழக்கறிஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடு கைது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு போலீசாரிடம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், சந்திரபாபு நாயுடு ஆந்திர சிஐடி போலீசாரின் கட்டுப்பாட்டில் விசாரணையில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊழல் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் சந்திரபாபு நாயுடுவின் பெயர் குறிப்பிடப்படாத நிலையில், அவரை சட்டவிரோதமாக போலீசார் கைது செய்தாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

போலீசார் கண்காணிப்பில் உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளதால், அவர் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் பெற உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

  • TDP chief and former Andhra Pradesh CM N Chandrababu Naidu's counsel says "CID has taken Chandrababu for a medical check-up after high Blood Pressure and diabetes were detected. We are approaching the High Court for bail,"

    — ANI (@ANI) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஒர்வக்கல் விமான நிலையத்தில் இருந்து விஜயவாடாவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல போலீசார் முடிவு செய்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தன் மீதான ஊழல் புகார் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சந்திரபாபு தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : G20 summit: கோலாகலமாக தொடங்கும் ஜி20 மாநாடு! உலக தலைவர்கள் இந்தியா வருகை!

Last Updated : Sep 9, 2023, 7:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.