ETV Bharat / bharat

இந்தியாவிலேயே அதிக பாலியல் தொழிலாளர்கள் மாநிலம்.. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள பட்டியல்.. - தெலங்கானா பாலியல் தொழிலாளர்கள்

ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தபூர், கர்னூல் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பூர்வீக பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

பாலியல் தொழிலாளர்கள்
பாலியல் தொழிலாளர்கள்
author img

By

Published : Jan 11, 2023, 11:09 AM IST

அமராவதி: பூர்வீக பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சில் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்பட்டியலில், “ ஆந்திராவாவில் மொத்தமாக 1.33 லட்சம் பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக கர்னூல், சித்தூர் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், கடப்பா மாவட்டத்தில் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்ட ஆய்வின்படி, நாட்டில் மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 55 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 447 பாலியல் தொழிலாளர்கள் ஆந்திரப் பிரதேசத்திலும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 288 பாலியல் தொழிலாளர்கள் கர்நாடகாவிலும், தெலுங்கானாவில் 1 லட்சத்து 818 பேரும், தமிழ்நாட்டில் 65 ஆயிரத்து 818 பேரும் உள்ளனர்.

இந்த பாலியல் தொழிலாளர்களில் 1,450 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு, மருந்துகளை உட்கொண்டு தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். பூர்வீக பாலியல் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, ஆந்திராவிற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் 59 ஆயிரத்து 785 பேரும், டெல்லியில் 46 ஆயிரத்து 786 பேரும், மிசோரமில் 833 பேரும் உள்ளனர்.

ஆந்திராவில் 11 ஆயிரத்து 639 பேர் அண்டை மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து பாலியல் தொழிலாளிகளாக உள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 781, கர்னூலில் 12 ஆயிரத்து 709, சித்தூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 296 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பனிமூட்டம் காரணமாக 26 ரயில்கள் தாமதம் - வடக்கு ரயில்வே அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.