ETV Bharat / bharat

உலக மகளிர் நாள்: இலவச நாப்கின்கள் வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கும் ஜெகன்மோகன்! - உலக மகளிர் தினத்தன்று இலவச நாப்கின்கள்

உலக மகளிர் நாளன்று பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக சுகாதார நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிவைக்கவுள்ளார்.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி
author img

By

Published : Mar 6, 2021, 2:55 PM IST

அமராவதி: ஆந்திராவில் 7 முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின் வழங்கும் திட்டத்தை உலக மகளிர் நாளன்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிவைக்கவுள்ளார்.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி
உலக மகளிர் நாள் - ஆந்திர முதலமைச்சர்

முதலமைச்சர் ஜெகன்மோகன் நேற்று (மார்ச் 5) அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், அலுவலர்களுக்குப் பெண்களின் ஆரோக்கியம், சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்த வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்காக ஆண்டுதோறும் 41.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள், குருகுலப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஜுலை 1 முதல் மாதந்தோறும் 10 சுகாதார நாப்கின்கள் வீதம் ஆண்டுக்கு 120 நாப்கின்கள் இலவசமாக செயுதா மளிகைக் கடைகளில் (Cheyutha Grocery shops) பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ளது. நகராட்சிப் பகுதிகளில் வறுமையை நீக்குவதற்கான மிஷன் (எம்இபிஎம்ஏ), கிராமப்புற வறுமையை நீக்குவதற்கான சமூகம் (எஸ்இஆர்பி) ஆகியவற்றின் அடிப்படையில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அரசால் வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகள் உடன் போட்டித் தேர்வுகளுக்கு மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கும் வகையில், புகழ்பெற்ற பயிற்சி நிலையங்களின் உதவியுடன் அரசின் அம்மாவோடி திட்டத்தின் மூலம் செயல்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சர்வதேச மகளிர் நாளாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சமூகம், பொருளாதாரம், கலாசாரம், அரசியல் ஆகியவற்றில் உலகளவில் சாதனைபுரிந்த பெண்களைப் போற்றும்விதமாக உலக மகளிர் நாள் கொண்டாடப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: குஜராத் சென்றடைந்தார் நரேந்திர மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.