ETV Bharat / bharat

ஒரு ரூபாய் ’இட்லி அம்மா’வுக்கு சொந்த வீடு: சொன்னதை செய்து காட்டிய ஆனந்த் மஹிந்திரா! - Idly amma

கோயம்புத்தூர்: ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி விற்பனை செய்து வந்த ‘இட்லி அம்மா’ என செல்லமாக அழைக்கப்படும் கமலாத்தாளுக்கு, மஹிந்திரா நிறுவனம் சொந்தமாக வீடு கட்டி வழங்க உள்ளது.

idly paati
இட்லி அம்மா
author img

By

Published : Apr 5, 2021, 8:16 AM IST

Updated : Apr 5, 2021, 10:49 AM IST

மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், "கோயம்புத்தூரைச் சேர்ந்த கமலாத்தாள் என்பவர், ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள பசியாற வேண்டும் என்பதற்காக விறகு அடுப்பு மூலம் ’ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி’ என்று மலிவான விலையில் விற்பனை செய்து வருகிறார். அவரது தொழிலில் ‘முதலீடு’ செய்ய விரும்புகிறேன். விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டால் ’இட்லி அம்மா’ நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆகத் தொடங்கினார். மேலும் விறகு அடுப்பில் சமைத்து வந்த இட்லி அம்மாவுக்கு கோயமுத்தூர் பாரத் கேஸ் நிறுவனம் இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கியது.

  • Only rarely does one get to play a small part in someone’s inspiring story, and I would like to thank Kamalathal, better known as Idli Amma, for letting us play a small part in hers. She will soon have her own house cum workspace from where she will cook & sell idlis (1/3) https://t.co/vsaIKIGXTp

    — anand mahindra (@anandmahindra) April 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்பிறகும் தொடர்ந்து மலிவான விலையில் கமலாத்தாள் உணவு வழங்கி வந்த நிலையில், அவருக்கு சொந்தமான இடத்தில் கொஞ்சம் பெரிய அளவில் இச்சேவையை வழங்க வேண்டுமென அவருக்கு ஆசை இருந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆசையையும் ஆனந்த் மஹிந்திரா தற்போது நிறைவேற்றியுள்ளார்.

மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் கமலாத்தாள் சொந்தமாக நிலம் வாங்கி பதிவு செய்ய உதவியிருக்கிறது. இதனை ஆனந்த மஹேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், "இட்லி அம்மா என்று அழைக்கப்படும் கமலாத்தாளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவரது தொழிலில் நான் சிறிய அளவில் முதலீடு செய்ய அனுமதித்துள்ளார். விரைவில் தனது சொந்த வீடு, பணியிடத்தில் இட்லிகளை விற்பனை செய்வார். மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் வீடு கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. கமலாத்தாளுக்கு தொடர்ந்து எல்பிஜி வழங்குவதற்காக பாரத் கேஸ் கோயம்புத்தூருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

anand mahindra Tweet
இட்லி அம்மாவுக்கு எரிவாயு அடுப்பு வழங்கிய பாரத் கேஸ்

இந்நிலையில், இட்லி அம்மாவின் விருப்பத்தை அறிந்து, அதனைச் செய்துகாட்டி உதவியுள்ள ஆனந்த் மஹிந்திராவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் உயிரிழப்பு

Last Updated : Apr 5, 2021, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.