ETV Bharat / bharat

கிணற்றில் தத்தளித்த யானை - பக்கவாட்டுச்சுவரை இடித்து மீட்பு

ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள விவசாய நிலத்தில் உணவு தேடி வந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது.

author img

By

Published : Nov 15, 2022, 5:47 PM IST

Etv Bharatஉணவுக்காக ஊருக்குள் வந்த யானை  கிணற்றில் விழுந்த பரிதாபம் - வனத்துறையினர் மீட்பு

சித்தூர்(ஆந்திரா): ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாங்குராபாலத்தின், மொகிலி பஞ்சாயத்தில் வசித்து வருபவர், விவசாயி ஜக்கையா. இவரது நிலமானது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இந்நிலையில் ஜக்கையாவின் நிலம் பல நேரங்களில் வன விலங்குகளால் சேதம் அடைந்துள்ளது. இதே போல் நேற்று (நவ-14) இரவு காட்டு யானை ஒன்று ஜக்கையாவின் நிலத்திற்கு உணவுத்தேடி வந்துள்ளது. அந்த யானை எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது.

இரவில் யானையின் அலறல் சத்தம் கேட்டு ஜக்கையா மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது யானை கிணற்றில் விழுந்து தத்தளித்துக்கொண்டு இருந்தது. இதனையடுத்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சித்தூர் வனத்துறை தலைமை அதிகாரி சைதன்ய குமார் தலைமையில் வனத்துறையினர் ஜேசிபி மூலம் போராடி கிணற்றில் இருந்து யானையை மீட்க முயற்சி செய்தனர்.

இதில் கிணற்றின் ஒரு பக்கம் சுவர் இடிக்கப்பட்டு யானை வெளியே கொண்டுவரப்பட்டது. வெளியே வந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கிடையில் விவசாயிகள் இது போல் யானைகள் அடிக்கடி வந்து பயிரை சேதம் செய்வதாக வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உணவுக்காக ஊருக்குள் வந்த யானை கிணற்றில் விழுந்த பரிதாபம் - வனத்துறையினர் மீட்பு

இதனையடுத்து வனத்துறை அதிகாரி, யானைகளால் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன் சேதமடைந்த கிணறும் சீரமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையும் படிங்க:வீடியோ: ஜார்க்கண்டில் பைக்கை தூக்கி வீசும் காட்டு யானை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.