ETV Bharat / bharat

கடவுள் கனவில் வந்து சொன்னதாக இறப்பு தேதியைக்குறித்த மூதாட்டி - சடங்குகளை செய்த ஊர் மக்கள் - கத்துமார் தாசில்தார் கிர்தர் சிங் மீனா

ராஜஸ்தானை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தூக்கமின்மையால் அவதிப்பட்டதால் இறந்து போவதற்காக நாள் குறித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Etv Bharatஇறப்பு தேதியை குறித்த மூதாட்டி - சடங்குகளை செய்த ஊர் மக்கள்

author img

By

Published : Oct 11, 2022, 11:17 AM IST

அல்வார்(ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலத்தில் கெட்லி நகரத்தில் உள்ள சவுங்கர் சாலையில் வசித்து வரும் 90 வயது மூதாட்டி ஒருவர் நெடுநாட்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்-9ஆம் தேதி மதியம் 12 மணிக்கு கடவுள் தன்னை மரணிக்க கூறியுள்ளதாகத்தெரிவித்து, அவரது வீட்டிற்கு வெளியே சமாதி கட்ட முடிவு செய்தார்.

இதனையடுத்து அந்த கிராம மக்கள் வருகை தந்து, பாசுரங்கள் பாடி, புடவைகள் மற்றும் பணம் கொடுத்து, ஒருவரின் மரணத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய சடங்குகளை நடத்தினர். இந்த சடங்குகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து கத்துமார் தாசில்தார் கிர்தர் சிங் மீனா சம்பவ இடத்திற்குச்சென்று அந்த சடங்குகளை தடுத்து நிறுத்தினார். பின்னர் அந்த மூதாட்டி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையில் கெட்லியில் உள்ள பிரகாஷ் மார்க்கில் சிரோன்ஜி தேவ் என்ற அந்த மூதாட்டி வசித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. அதனை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் விசாரணையில் கடந்த ஒரு மாதமாக தன்னால் தூங்க முடியவில்லை எனவும், சனிக்கிழமையன்று அவர் இறக்கும் தேதியைக் கடவுள் கனவில் வந்து சொன்னதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மூதாட்டியின் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்த முயன்றும் கேட்காமல் இறக்கப்போவதாக அடம்பிடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:70 வயது மனைவியைக்கொலை செய்த 78 வயது கணவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.