வல்சாத்: அகமதாபாத் அருகே இன்று அதிகாலை வந்தே பாரத் ரயிலில் அதுல் ரயில் நிலையம் அருகே மாடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
குஜராத் மாநிலம் வல்சாத் அருகே அதுல் ரயில் நிலையத்தில் இருந்து அகமதாபாத் செல்லும் பாரத் ரயிலின் முன் திடீரென மாடு ஒன்று வந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் ரயிலின் என்ஜின் பகுதி சேதம் அடைந்தது. இதுபோல ரயில்களில் விலங்குகள் மோதி விபத்துக்குள்ளாவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தின் போது யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: இண்டிகோ விமானத்தில் தீ... பயணிகள் அச்சம்... டெல்லியில் அவசர தரையிறக்கம்...