ETV Bharat / bharat

அமித் ஷா பரப்புரை: கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் காயம் - தேசிய ஜனநாயகக் கூட்டணி

புதுச்சேரியில் அமித் ஷா பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும், சாக்கடையில் விழுந்தும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

Amitsha Campaign: 5 injured in a stampede

author img

By

Published : Apr 1, 2021, 2:00 PM IST

புதுச்சேரி: மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக இன்று புதுச்சேரிக்கு வருகைதந்தார். புதுச்சேரி வந்த அவர் நேரடியாக குரு சித்தானந்த சுவாமி கோயிலில் தரிசனம்செய்தார்.

தொடர்ந்து, புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் திறந்தவெளி வேனில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலில் அவரது வேன் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிக்கியது.

கூட்ட நெரிசலில் சிக்கிய 5 பேர் காயம்

இதையடுத்து, கட்சியினர் அறிவுறுத்தலின்பேரில், பத்திரிகையாளர்களின் வாகனம் முன்னேறியது. இதனை அறிந்த மக்கள் நகர இடம் இல்லாமல் நிலைதடுமாறி, அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தனர்.

இதில் ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையில் நேரமின்மை காரணமாக மத்திய அமைச்சர் அமித் ஷா எங்கும் பேசாமல் கிளம்பிச் சென்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.