புதுச்சேரி: சிங்கப்பூர் தூதர் பாங் காக் தியான் மரியாதை நிமித்தமாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் இன்று(அக்.5) சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு நல்லுறவு, ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினர்.
அப்போது தமிழசை செளந்தரராஜன், சிங்கப்பூர் பன்னெடுங்காலமாக வணிகம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் இந்திய நாட்டோடும், மக்களோடும் நல்லுறவு கொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் ஏழு லட்சம் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில், தமிழையும் ஒரு அலுவல் மொழியாக சிங்கப்பூர் அரசு அறிவித்திருப்பது தமிழர்கள் பெருமைபடக் கூடிய ஒன்று என தெரிவித்தார்.
இருவர் கலந்துரையாடல்
மேலும் கலந்துரையாடலில், கரோனாவை கட்டுப்படுத்துவதில் அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி துறைகளில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவது. நீர் சேமிப்பு, நீர் மேலாண்மை ஆகியவற்றில் சிங்கப்பூர் சிறப்பாக செயல்படும் நிலையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், கடற்கரைச் சுற்றுலா மேம்பாடு, கல்வி-தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தல் ஆகியவற்றில் உதவுவது, இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவது, கடல் சீற்றங்கள், புயல் போன்ற இயற்கை பேரிடர் சூழல்களை எதிர்கொள்வதில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது போன்றவை இடம்பெற்றன.
அதேசமயம் இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலேசிக்கப்பட்டது
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதுதான் அமைதிக்கான வழி - முதலமைச்சர்