பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா, மறைந்த கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தாவின் மகனும், பாஜக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பேரனுமான அமர்த்தியாவை இன்று மணமுடித்து கரம் பிடித்தார்.
இவர்களது திருமணம் இன்று பெங்களூரு வைட்ஃபீல்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், பெரியவர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடியூரப்பா, திக்விஜய் சிங், மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். வரும் பிப்ரவரி 20ஆம் தேதி அரண்மனை மைதானத்தில் பிரமாண்ட விருந்து நடைபெறவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.